Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.10.2022) | 1 PM Headlines | Thanthi TV
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்.... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் சமர்ப்பிப்பு....
அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என அதிர்ச்சித் தகவல்... ஜெயலிதாவின் கடைசி மூச்சு வரை ஆஞ்சியோ செய்யப்படாதது ஏன் என ஆணையம் பரபரப்பு கேள்வி...
ஜெயலலிதா உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டற்ற நீரிழிவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்... ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்..
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க தயார் என்று இங்கிலாந்து மருத்துவர் ரிச்சட் பீலே கூறியும் அழைத்து செல்லாதது ஏன்?... ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் அடுக்கடுக்கான கேள்வி...
ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 3 மணியிலிருந்து 3.50-க்குள் இறந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல்...2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை அறிவித்திருந்த நிலையில் முரண்பாடு..