ஊர் கண் பட்ட பிரபல யூடியூப் ஜோடிகள்.. உடல் அழுகிய நிலையில் பார்த்து கதறிய மகன்.. கடைசி வீடியோ வைரல்

Update: 2024-10-28 09:14 GMT

ஊர் கண் பட்ட பிரபல யூடியூப் ஜோடிகள்.. உடல் அழுகிய நிலையில் பார்த்து கதறிய மகன்.. கடைசி வீடியோ வைரல்

"இருட்டு அடைந்த வீடு.. காற்றில் பரவிய துர்நாற்றம்.." என தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் வசித்த பிரபல யூடியூபரின் வீட்டில் நடந்த பெரும் சோக சம்பவம் குறித்து பார்க்கலாம்..விரிவாக..

தமிழக - கேரளா எல்லையான பாறசாலை அருகே செறுவாரக்கோணம் பகுதியில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.. யூடியூப்பில் பிரபலமாகி இருந்த செல்வராஜ் -ப்ரியலதா தம்பதியினரின் நிஜ வாழ்க்கையின் மறுபக்கம் மகிழ்ச்சியாக இருந்ததாக இல்லை எனக் கூறப்படுகிறது..

வெவ்வெறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொன்டனர். இவர்களுக்கு ப்ரீது என்ற மகளும், சேது என்ற மகனும் உள்ளனர். மகள் ப்ரீதுவிற்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சேது நர்சிங் படிப்பு முடித்துவிட்டு, கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்..

இதனிடையே, வீட்டில் தனியாக இருந்த கணவன் மனைவி இருவரும், "Sellu Family" என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.. இதில், தங்களது அன்றாட நிகழ்வுகளை பதிவிட்டு வந்துள்ளனர்..

என்ன காரணமோ.. தெரியவில்லை.. அக்கம்பக்கத்தினருடன் இவர்களுக்கு அதிகம் பழக்கமில்லாமல் இருந்துள்ளது..

இந்த நிலையில் தான், கடந்த 4 நாட்களுக்கும் மேலாகவே.. இவர்களது வீட்டில் வெளிச்சமின்றி.. ஆட்கள் நடமாட்டம் ஏதுமின்றி இருந்துள்ளது..

அக்கம்பத்தினரும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அப்போது தான், விடுமுறைக்கு கொச்சியில் இருந்து பெற்றோரைக் காண ஆவலுடக் காண வந்த சேதுவிற்கு.. வீட்டில் அந்த அதிர்ச்சி காத்திருந்தது..

தனது வீடு பூட்டி, இருள் சூழ்ந்து கிடப்பதைக் கண்டு தயக்கத்துடன் பெற்றோரின் செல்போனிற்கு அழைத்துள்ளார், சேது. பலமுறை அழைப்புகளையும் எடுக்காததால்.. சேதுவிற்கு மனதில் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது..

நேரம் ஆக ஆக... அழுதபடி, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த சேது, ஆடிப்போயிருக்கிறார்..

உள்ளே பெட்ரூமில் தந்தை தூக்கில் தொங்கியபடியும், தாயார் படுத்தப்படுக்கையாகவும் இறந்துபோய் உடல் அழுகியநிலையில் கிடந்த சம்பவம் சேதுவிற்கு தலையில் பேரிடியாய் விழுந்துள்ளது..

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.. பின்னர் தகவல் அறிந்த பாறசாலை போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி இருக்கின்றனர்..

மர்மமான முறையில், கணவன் - மனைவி வீட்டில் இறந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது த*கொலையா? அப்படி த*கொலையாக இருப்பின்.. இதன் காரணம் என்ன? உள்ளிட்டவை குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்..

இறுதியாக, யூடியூப் சேனலில் 4 நாட்களுக்கு முன்பு, "விடைபறையுகயாய் ஈ ஜென்மம்.." என்ற மலையாளப் பாடலுக்கு கணவன் மனைவி இருவரும் உள்ள புகைப்படங்களைப் பதிவிட்டு வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்