தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வயநாடு நிலசரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம், கேரள முதல்வர் பினரயி விஜயனிடம் வழங்கப்பட்டது.
நெல்லை டவுணை சேர்ந்த இரண்டு மாணவர்கள், வயநாடு நிவாரணமாக, உண்டியலில் சேர்த்து வைத்த நான்காயிரத்து 448 ரூபாயை ஆட்சியரிடம் வழங்கினர்.
பெரியகுளத்தில் இருந்து காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள், ஆடைகள், காலனி என 7 டன் எடையிலான பொருட்களை பிறர் நலன் நாடும் அமைப்பினர் எடுத்து சென்றனர்.
கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வயநாடு மக்களுக்கு ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து மற்றும் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.