இரவில் பேய் போல் ஆடிய இயற்கை...ஊரே பூமிக்குள் புதைந்த படுபயங்கரம் - வயநாட்டில் ஓயாத மரண ஓலம்
இரவில் பேய் போல் ஆடிய இயற்கை
ஊரே பூமிக்குள் புதைந்த படுபயங்கரம்
சேறும்..நீருமாக மண்ணுக்குள் உடல்கள்
வயநாட்டில் ஓயாத மரண ஓலம்
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ளது.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வயநாட்டில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதிகாலை முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேப்பாடி, முண்டகை, சூரல்மலை உள்ளிட்ட பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன. சூரல்மலை - முண்டகை சாலை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நிலச்சரிவில், சூரல்மலா பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மூன்று இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ளது. வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளுக்குள் தண்ணீரும் சேறும் புகுந்தன. இந்நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.