காரை விட்டு ஆக்ரோஷமாக இறங்கி பங்க் ஊழியரை தாக்கிய MLA மகன் - தீயாய் பரவும் காட்சிகள்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானின் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் என்ன, பெட்ரோல் பங்கில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, காரில் இருந்து வேகமாக இறங்கும் எம்எல்ஏவின் மகன், பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.