3 குழந்தைகளை தூக்கி வீசி கொன்ற கொடூர தந்தை.. பேரதிர்ச்சியில் உ.பி. மக்கள்

Update: 2024-05-11 12:53 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் ஒருவர் தாய், மனைவி, குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

பல்ஹாபூர் கிராமத்தில் மன நலன் பாதிக்கப்பட்டு போதைக்கு அடிமையான 42 வயதான அனுராக் சிங்கை அவரது குடும்பத்தினர் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க முடிவு செய்ததைத் தொடர்ந்து அனுராக் சிங் தொடர்ந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்... சம்பவத்தின் போது வாக்குவாதம் ஏற்பட்டு தாய் சாவித்ரியை சுட்டுக் கொன்ற அனுராக் சிங், பின்னர் தனது மனைவி பிரியங்காவை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்தார்... மேலும், தனது 12, 9 மற்றும் 6 வயதே நிரம்பிய 3 குழந்தைகளையும் வீட்டின் மேற்கூரையில் இருந்து தூக்கி வீசிக் கொன்றுள்ளார்... தொடர்ந்து அனுராக் சிங் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்... போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்