இந்தியாவை உலுக்கிய உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து.."வெறும் 7 நாட்கள் தான்".. மத்திய அரசு உத்தரவு
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டு, 41 தொழிலாளர்கள் சிக்கியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டப்பட்டு வரும் 29 சுரங்கப்பாதைகளின் பாதுகாப்பு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தல் 12 சுரங்கங்கள், காஷ்மீரில் 6 சுரங்கங்கள், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 2 சுரங்கங்களும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, சட்டீஷ்கர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என, 79 கிலோ மீட்டர் நீளத்திற்கு 29 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சுரங்கப்பாதைகளை அமைத்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுரங்கப்பாதைகளை ஆய்வு செய்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.