திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது... பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. மேலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 4 கோடியே 13 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. 85 ஆயிரத்து 626 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் 33 ஆயிரத்து 138 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.