அழைத்த திருப்பதி ஏழுமலையான்.. எதையும் யோசிக்காமல் சிறுவன் செய்த செயல்.. குலைநடுங்கி போன பெற்றோர்

Update: 2024-08-07 04:04 GMT

12 வயது சிறுவன் ஹைதராபாத்தில் இருந்து தனியாக திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த மதுசூதன் - கவிதா தம்பதியின் 12 வயது மகன் பெற்றோரிடம் சொல்லாமல் ஆயிரம் ரூபாய் பணத்துடன் தனியாக திருப்பதி சென்றுள்ளான். மகனை காணாத பெற்றோர் போலீசில் புகார் அளித்துவிட்டு எல்லா இடங்களிலும் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் காணாமல் போன சிறுவன் ஏழுமலையானை கும்பிட்டுவிட்டு வெளியில் வருவதை கவனித்த போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இதுவரை 15 முறை பெற்றோருடன் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்த தனக்கு மீண்டும் மீண்டும் ஏழுமலையானை கும்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதனால், தான் சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்துடன் திருமலை வந்ததாகவும் அவன் கூறியுள்ளான். தகவல் அறிந்து திருப்பதி வந்த பெற்றோரிடம் சிறுவன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டான்.

Tags:    

மேலும் செய்திகள்