தொடர்ந்து 3 நாட்கள் வந்த கார் ..12 அடியில் தோண்டப்பட்ட குழி..சுற்றி கிடந்த அமானுஷ்ய பொருட்கள்
தொடர்ந்து 3 நாட்கள் வந்த கார் ..12 அடியில் தோண்டப்பட்ட குழி..சுற்றி கிடந்த அமானுஷ்ய பொருட்கள் - சென்னை அருகே திக் திக் சம்பவம்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே காட்டுப்பகுதியில் ஒரு ஆளை புதைக்கும் அளவுக்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிளேஸ்பாளையம் கிராமத்தில், முட்புதர் நிறைந்த காட்டுப்பகுதியில் மூன்று இடங்களில் பெரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. குழிகளை சுற்றி எலுமிச்சம்பழம், சிவப்பு துணி, ஆணி ஆகியவை போடப்பட்டுள்ளன. இதைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரு சிலருக்கு பயத்தால் உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. அந்த குழிகள் இருக்கும் இடத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பௌர்ணமி நாளன்று, கேரள பதிவெண் கொண்ட காரில் 5 பேர் வந்து சென்றதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தும் யாரும் இதுவரை வந்து பார்க்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், அசம்பாவிதம் ஏற்படும் முன் அரசு முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.