அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்.. காணொலி வாயிலாக முதல்வர் கொடுத்த விளக்கம்..திக்குமுக்காடும் டெல்லி

Update: 2024-02-28 03:54 GMT

ஏற்கனவே அமலாக்கத்துறை கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி அனுப்பி இருந்த சம்மனுக்கு பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வழங்கப்பட்டுள்ள சம்மன் சட்ட விரோதமானது என்று தெரிவித்திருந்தார். அதன் பிறகு அமலாக்கத் துறை 2 முறை சம்மன் அனுப்பியபோது, 4 மாநில தேர்தல் பரப்புரையில் பங்கேற்பதை தடுப்பதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும், தியானத்தில் பங்கேற்பதை தடுக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக, கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி வாயிலாகி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதற்கிடையே, மார்ச் 4ம் தேதி ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு 8-ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்