அதிக வட்டி வசூலித்த உரிமையாளர்..! கட்டவுட்டின் மேல் இருந்து குதித்த தொழிலாளி
ஆந்திர மாநிலம் சத்யசாய் நகரில், 26 ஆயிரம் ரூபாய் கடனுக்கு ஒன்றரை லட்சம் திரும்ப கேட்டதால், பல அடி உயர கட்-அட்டில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி காயங்களுடன் மீட்கப்பட்டார். கூலி தொழிலாளியான ராணா, தனது உரிமையாளரிடம் 26 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்ட அவரது உரிமையாளர் ஒன்றரை லட்சம் ரூபாய் திரும்ப கேட்டதால் அதிர்ச்சியடைந்த ராணா, பல அடி உயர கட் - அட்டில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். காயங்களுடன் அருகிலிருந்த கடையின் மேல் விழுந்த அவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்