சத்தமே இல்லாமல் சாமான்யர்களுக்கு இஸ்ரோ செய்த மகத்தான நன்மைகள்.. இன்றும் காப்பாற்றப்படும் உயிர்கள்..!
இஸ்ரோ நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள், மருத்துவ சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அளிக்கும் பங்களிப்பு பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.
சந்திரயான் மூன்றின் லேண்டர் கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியுள்ள இஸ்ரோ, சத்தமில்லாமல் பல்வேறு இதர துறைகளிலும் பங்களித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் 14 கோடி பேர் ஏழ்மையில்
உள்ள நிலையில், 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்துவது தேவையா? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக இஸ்ரோ உருவாக்கிய புதிய தொழில்நுட்பங்கள் மூலம் மலிவான, உறுதியான செயற்கை கால்கள், செயற்கை தாடைகள், மூட்டுகள், வெண்டிலேடர்கள், இதயத்தில் பொருத்தப்படும் செயற்கை வால்வுகள், பம்புகள் போன்றவை இந்த கேள்விக்கு பதிலாக அளிக்கப்படுகிறது.
தீயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் மேல் பூச்சுகள், அதீத குளிரில் இருந்து ராணுவ வீரர்களை பாதுகாக்க பயன்படுத் தப்படும் செயற்கை இழை ஆடைகளையும் இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
பேரிடர் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் ரேடியோ
பீகான்கள், புயலில் காணாமல் போன படகுகள், கப்பல்களின் இருப்பிடத்தை சுட்டிக் காட்டும் டிரான்ஸ்மிட்டர்கள் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளது.
இஸ்ரோ உருவாக்கும் தொழில்நுட்பங்களை, தொழில்
துறைக்கு மாற்ற, 2019ல் நியூ ஸ்பேஸ் இந்தியா என்ற
பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இதுவரை 78 புதிய தொழில்நுட்பங்களை இந்த நிறுவனம், தனியார் நிறுவனங்களுக்கு வணிக அடிப்படையில் மாற்றி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூட்டர் தொடர்பான
தொழில் நுட்பங்கள், தொலைதொடர்பு தொழில்நுட்பங்கள்
இவற்றில் 45 சதவீதமாக உள்ளன.
ரசயானங்கள் மற்றும் சிறப்பு பொருட்கள் தொடர்பான தொழில்நுட்பங்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.
இஸ்ரோவின் சாதனைகளினால் ஈர்க்கப்பட்டு, நாடு
முழுவதும் ஏராளமான மாணவர்கள் விஞ்ஞான
ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்கம் பெறுகின்றனர்.