புதிய வந்தே பாரத் ரயிலில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா? - வெளியான Exclusive தகவல்

Update: 2024-09-01 10:33 GMT

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இருபதுக்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. தற்போது இருக்கை வசதி மட்டும் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வரும் நிலையில், வரும் நவம்பர் மாதம் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்திருந்தது. பெங்களூருவில் தயாரிக்கப்பட்டு வரும், படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் டாக் பேக் மூலம் ரயில் ஓட்டுநருடன் பேசும் வசதி, ஸ்விட்ச் மூலம் இயங்கக்கூடிய கதவுகள், தானியங்கி பிரேக், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்