மின் கம்பத்தை சரி செய்ய சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் - வெளியான பதைபதைக்க வைக்கும் காட்சி

Update: 2024-07-19 13:52 GMT

கேரளாவில் மின்கம்பங்களை சரி செய்ய சென்ற மின்துறை வாகனம் மழைநீரில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்மேற்கு பருவமழை காரணமாக, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்தது. கண்ணூர் மாவட்டத்தில், சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்ய சென்ற மின்துறை வாகனம் ஒன்று, மழை நீரில் மூழ்கியது. இதில் மூன்று மின்துறை பணியாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டனர். தற்போது, மின்துறை வாகனத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்