"பிரதமருக்கும் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி" - மனம் பொங்க பேசிய மீனவர்கள்

Update: 2023-11-20 02:57 GMT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலையான பம்பன் மீனவர்கள், பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் 22 பாம்பன் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது குடும்பத்தினர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நிர்மலா சீதாராமன், இந்த விவகாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கொண்டு சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதையடுத்து, மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. தொடர்ந்து, 22 மீனவர்களும் இன்று ராமேஸ்வரம் திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கைதான 24 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் அதற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்