எவ்வளவு சொல்லியும் கேட்காத தெலுங்கானா அமைச்சர்.. தேர்தல் கமிஷன் எடுத்த அதிரடி ஆக்சன்

Update: 2023-11-27 10:20 GMT

தெலுங்கானாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை ராய்த்து பந்து திட்டத்தின் கீழ் தொகையை விடுவிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணையாக அளிக்கும் ராய்த்து பந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய தொகையை செலுத்த தேர்தல் ஆணையத்திடம் தெலங்கானா அரசு அனுமதி கோரியிருந்தது.

கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம் புதிய பயனாளிகள் யாரையும் திட்டத்தில் சேர்க்கக்கூடாது, விளம்பரங்கள் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ராய்த்து பந்து திட்டத்தின் கீழ் தொகையை விடுவிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் தெலுங்கானா மாநில நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ், தேர்தலுக்கு முன்பாக ஏதாவது ஒரு நாளில் தொகை விடுவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, அனைத்து செய்தி தாள்களிலும் வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி, தெலுங்கானா அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்