கேரளாவில் மீண்டும் பன்றி காய்ச்சல் பன்றிகளை கொன்று புதைக்க அதிரடி உத்தரவு
கேரள மாநிலம், கண்ணூர் பகுதியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. மலையம்பாடி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணையில், பன்றிக் காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நோய்த் தாக்குதலுக்கு ஆளான பன்றிகளை கொன்று முறைப்படி புதைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நோய் கண்டறியப்பட்ட பகுதியிலும், அங்கிருந்து மற்ற இடங்களுக்கும் பன்றி இறைச்சி விற்பனை மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.