உலகமெங்கும் ஜெயிலர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பட ரிலீசுக்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணமானார். கொரோனா பரவல் உட்பட பல காரணங்களால், இமயமலை பயணத்தை கடந்த இரு ஆண்டுகளாக தவிர்த்த ரஜினி, இந்தமுறை ஆன்மீக பயணம் மேற்கொண்டார். தான் வழக்கமாக செல்லும் ஆசிரமங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிற்கு சென்று வரும் அவர், தற்போது வியாசர் குகைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து சரஸ்வதி நதி மறையும் இடத்தையும் நின்று பார்வையிட்டார்.