அனல் பறந்த கோடைகாலம்.. திடீரென சூழ்ந்த கரு மேகங்கள்.. குளிர்த்துப்போன பெங்களூர் மக்கள்
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிய நின்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் 16 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.