ஆஸ்திரேலியாவை வெளியே தள்ளி இறுதிப்போட்டிக்கு கெத்தாக என்ட்ரி கொடுத்த தென் ஆப்பிரிக்கா

Update: 2024-10-18 02:33 GMT

ஆஸ்திரேலியாவை வெளியே தள்ளி இறுதிப்போட்டிக்கு கெத்தாக என்ட்ரி கொடுத்த தென் ஆப்பிரிக்கா


துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பெத் மூனி 44 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 135 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 42 ரன்கள் எடுத்தார். அரைசதம் அடித்த ஆன்கி போஷ் (Anneke Bosch) 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 18வது ஓவரில் இலக்கை எட்டிய தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்குள் நுழைந்தது. ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து வெளியேறியது.

Tags:    

மேலும் செய்திகள்