சிக்கி சீரழியும் சிக்கிம்.. எங்கும் கேட்கும் மரண ஓலங்கள்...கேள்வி குறியான 142 பேரின் உயிர் | Flood
சிக்கி சீரழியும் சிக்கிம்.. எங்கும் கேட்கும் மரண ஓலங்கள்...கேள்வி குறியான 142 பேரின் உயிர்
சிக்கிம் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் மாயமான 142 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சிக்கிம் மாநிலம் லாச்சன் பள்ளத்தாக்கு, லோனாக் ஏரிப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேகவெடிப்பு ஏற்பட்டு, குறுகிய நேரத்தில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் டீஸ்டா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, ஆற்றங்கரையையொட்டிய வீடுகள், பாலங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் சேதமடைந்தன. வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போயுள்ள 142 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக, அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மங்கன் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை, முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் நேரில் பார்வையிட்டார். பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குறைகளை கேட்டறிந்தார். வெள்ளத்தில் சுமார் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 900 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.