குண்டு வெடிப்பு பற்றி சர்ச்சை.. மத்திய அமைச்சர் மன்னிப்பு கோருவதில் சிக்கல்

Update: 2024-08-17 08:02 GMT

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்க தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து திமுக அளித்த புகாரின் பேரில், நான்கு பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில், ஏற்கனவே எக்ஸ் தளம் வாயிலாக மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்