ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திரமாநில அரசுப்பேருந்து, திருவள்ளூரில் தீப்பிடித்து எரிந்துள்ளது. புழலில் உள்ள கதிர்வேடு சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகே இந்த பேருந்தானது வந்து கொண்டிருந்தபோது, திடீரென என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து, பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகளை ஓட்டுநர் இறக்கிவிட்டுள்ளார். இந்நிலையில் என்ஜினில் இருந்து தீப்பிடித்து, பேருந்து முழுவதும் எரியத்தொடங்கியது. இதனையடுத்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.