இசைக் கச்சேரியில் நடந்த கொடூர தாக்குதல் - கொத்து கொத்தாக மடிந்த அப்பாவி மக்கள்..!அறிகுறி காட்டிய USA

Update: 2024-03-23 06:11 GMT

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசைக்கச்சேரியில் 60க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பிக்னிக் எனும் இசைக்குழுவினர் நடத்திய இசைக்கச்சேரியில் மர்ம நபர்கள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுவின் கிளை மாஸ்கோவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தகவல் அறிந்ததாகவும், அதை ரஷ்ய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இசைக் கச்சேரியில் தாக்குதல் நடத்தியவர்கள் வெடிபொருட்களையும் வீசியுள்ளனர்... மேற்கூரை இடிந்து விழுந்து அரங்கமே தீப்பிழம்பாகக் காட்சியளித்தது. ஏறக்குறைய 6 ஆயிரத்து 200 பேர் கலந்து கொள்ளும் வகையிலான இந்த "குரோகஸ் சிட்டி ஹாலில்" தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே ரஷ்ய அதிபர் புதினுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்