கனமழைக்கே திணறும் போது வானத்தில் திடீர் மேக வெடிப்பு - ஒன்றரை மணி நேரத்தில் நிகழ்ந்த பயங்கரம்

Update: 2024-05-29 03:35 GMT

கனமழைக்கே திணறும் போது வானத்தில் திடீர் மேக வெடிப்பு - ஒன்றரை மணி நேரத்தில் நிகழ்ந்த பயங்கரம்

நடுங்க விட்ட இயற்கையின் ருத்ர தாண்டவம்

கேரள மாநிலம், கொச்சியில் மேகவெடிப்பால் கனமழை வெளுத்து வாங்கியதில், 3 பேர் பலியாகியுள்ள நிலையில், மழை பாதிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்...

கேரளா மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் ஒன்றரை மணி நேரத்தில், 98.4 மில்லிமீட்டர் மழை பெய்து, மக்களை ஸ்தம்பிக்க செய்தது..

குறிப்பாக, கொச்சியில் காலையில் கொட்டித்தீர்த்த மழையால், எம்.ஜி. ரோடு, இன்போ பார்க் உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அப்பகுதியில் இருந்த இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின...

ஆலுவா-இடப்பள்ளி சாலை, அய்யப்பன் சாலை, எடப்பள்ளி சாலை ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதோடு..சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், தண்ணீரில் வாகனங்கள் சிக்கின.

மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெருக்களில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது..

அத்துடன்..மார்கெட் பகுதியில் புகுந்ததால், காக்கநாடு வாழை சந்தை,மழை நீரில் மூழ்கியதோடு, சந்தையில் இருந்த மீன், இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்டவையும் வெள்ளநீரில் மூழ்கின.

இந்த கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த துயரமும் அரங்கேறியுள்ளது...

பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு பருவமழை மே 31 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்