எதிர் எதிரே ராகுல், மோடி.. நடந்த திடீர் மீட்டிங்... என்ன காரணம்?

Update: 2024-08-10 02:51 GMT

எதிர் எதிரே ராகுல், மோடி.. நடந்த திடீர் மீட்டிங்... என்ன காரணம்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களை சபாநாயகர் ஓம் பிர்லா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அரசு சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், எல். முருகன் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா, மதிமுக எம்.பி. துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பட்ஜெட்டை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கியதற்காக அரசின் சார்பில் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்