சுக்குநூறான ராகுலின் கனவு | haryana election 2024 | rahul gandhi

Update: 2024-10-09 03:00 GMT

பெரும்பான்மை பலத்துடன் அரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று, பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.90 தொகுதிகளைக் கொண்டுள்ள அரியானா சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் 60 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது காங்கிரஸ்.

ஆனால், நேரம் செல்ல இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு, இறுதியில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது.பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட 48 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.இதன்மூலம் தொடர்ந்து 3வது முறையாக அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.37 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், இந்திய தேசிய லோக் தள் கட்சி இரண்டு இடங்களிலும், சாவித்திரி ஜிண்டால் உட்பட மூன்று சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என சொல்லப்பட்ட நிலையில், நேரெதிராக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்