ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட நிலையில், சுமார் 10 ஆண்டுகள் கழித்து, 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது.தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி முன்னிலைப் பெற்று வந்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.பாஜக 29 இடங்களிலும், மெகபூபா முஃப்தியின் பிடிபி கட்சி 3 இடங்களிலும் , ஆம் ஆத்மி கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 7 இடங்களை சுயேட்சைகள் கைப்பற்றி உள்ளனர்.