டெல்லியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஆஸ்தா கண்ணா, தனது தந்தையுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நிலையில், தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் அமர்ந்திருந்த போது அவரது மோதிரம் தவறி விழுந்துள்ளது. புகாரின் பேரில் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மோதிரத்தை தேடிய போலீசார், கற்களுக்கு இடையே இருந்த மோதிரத்தை மீட்டுக்கொடுத்தனர்.