"ஹோட்டல் ரூம் பிளஸ் பெண்ணுக்கு ரூ.30,000" - ஆப் மூலம் புக் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
லோகாண்டோ செயலி மூலம் உல்லாசமாக இருக்க பெண்களை அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 5 பேரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த பிரவீன் என்பவர் அளித்த புகாரில், லோக்காண்டோ ஆப்பில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டதாக கூறியுள்ளார். முதலில் 500 ரூபாய் பெற்றுக்கொண்டு சில பெண்களின் புகைப்படத்தை அனுப்பியதாகவும், ஒரு பெண்ணை தேர்வு செய்ததும், கார் வாடகை ஆயிரத்து 500 ரூபாய், விடுதி மற்றும் அந்த பெண்ணுக்கான கட்டணம் 30 ஆயிரம் ரூபாயும் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், பணம் அனுப்பிய பின்னர், யாரும் போன் எடுக்காததால், ஏமாற்றப்பட்டதை அறிந்ததாக புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், மோசடி செய்தவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தனர். பொள்ளாச்சி சென்று 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 8 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் 3 ஆண்டுகளாக பலரிடம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.