"அவமதிப்பது, நாட்டை பிளவுபடுத்துவது... இது தான் அடையாளம்.." பேச்சில் அனலை கக்கிய PM மோடி
ராணுவத்தை அவமதிப்பது, நாட்டை பிளவுபடுத்துவது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் அடையாளம் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அதில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்த நிலையில், பா.ஜ.க. அரசு அதை நிறைவேற்றியதாக தெரிவித்தார். மேலும், ராணுவத்தை அவமதிப்பதும், நாட்டை பிளவுபடுத்துவது மட்டுமே காங்கிரசின் அடையாளம் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க. என்ன சொன்னாலும் செய்யும் என்றும், மற்ற கட்சிகளை போல தேர்தல் அறிக்கையாக மட்டும் வெளியிடாமல், திட்டங்களை பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.