பால்வாடை மாறா பச்சிளம் குழந்தை - சித்தி செய்த கொடூர செயல் - நெஞ்சை பிழியும் சோகம்

Update: 2023-09-02 09:26 GMT

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம், வடகேரா பபலா கிராமத்தை சேர்ந்த சித்தப்பா-ஸ்ரீதேவிக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஸ்ரீதேவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக்கூறி, தேவலம்மா என்பவரை சித்தப்பா 2-வது திருமணம் செய்தார். இதையடுத்து, ஸ்ரீதேவி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார். சித்தப்பா - தேவலம்மா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதேவியை அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி கணவருடன் சேர்த்து வைத்தனர். ஒரே வீட்டில் சித்தப்பா-வுடன் ஸ்ரீதேவி, தேவலம்மா மற்றும் குழந்தைகள் வசித்தனர். ஸ்ரீதேவிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி வாயில் நுரை தள்ளி இறந்தது. தனக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், சொத்து பிரச்னை காரணமாக, ஸ்ரீதேவியின் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்துகொடுத்து கொன்றதை தேவலம்மா ஒப்புக்கொண்டதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்