காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி கலக்கமடைந்து உள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் சம்ருதா பாரத் ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், பெரு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 16 லட்சம் கோடியின் ஒரு பகுதியை, நாட்டில் உள்ள 90 சதவீதம் இந்தியர்களுக்கு பகிர்ந்து வழங்குவதையே, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமர் மோடி கலக்கமடைந்து விட்டதாக தெரிவித்த ராகுல் காந்தி, இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சரிசெய்வேன் என்று உறுதி அளித்ததும், தன்னை பாஜகவும் பிரதமரும் தாக்க தொடங்கி விட்டதாகவும் விமர்சித்தார்.