மோடி அரசின் கடைசி பட்ஜெட்.. புதிய நா.மன்றத்தில் முதல் பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் சாதனை

Update: 2024-02-01 07:08 GMT

மத்திய இடைக்கால பட்ஜெட் - இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

6வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார், நிர்மலா சீதாராமன்

தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என எதிர்பார்ப்பு

மத்திய அரசு, மகளிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் பெண் வாக்காளர்களை கவர அறிவிப்புகள்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, 2024-25 ம் நிதியாண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ்குமாரிடம் கேட்கலாம்....

இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் இடைக்கால மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றுவார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக இடைக்கால மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப்புதல் வழங்கும்.

மக்களவை பொதுத் தேர்தலுக்கு முந்தைய தேர்தல் கால பட்ஜெட் இது என்பதால் நாளை தாக்கல் செய்யப்படுவது இடைக்கால பட்ஜெட் ஆக இருந்தாலும் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மகளிர் சக்திக்கு மத்திய அரசு அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்