"மக்களை தவறாக வழிநடத்தும் நிா்மலா சீதாராமன்" - கேரள முதல்வர் பினராயி விஜயன் | Kerala | BJP
மலப்புரம் மாவட்டம் திரூா் நகரில் செய்தியாளா்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவிற்கு மத்திய அரசு உரிய நேரத்தில் முறையாக நிதி விடுவிப்பதாகக்கூறி, மக்களை தவறாக வழிநடத்த மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் முயற்சிப்பதாகத் தெரிவித்தார். கேரளத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல்வேறு பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு, மத்திய அரசின் பங்களிப்பு குறித்து போலி பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களின் கடன் வாங்கும் அளவைக் குறைத்ததோடு, ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதையும் மத்திய அரசு நிறுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இலவசங்களையும், மத்திய அரசின் தாராள மனப்பான்மையையும் மாநிலங்கள் எதிா்பாா்க்கவில்லை என்றும், தங்களின் உரிமைகளையே மாநிலங்கள் கோருவதாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்