மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டி - 60 ஆண்டுகளுக்கு பின் தமிழ் மண்ணிலிருந்து செல்லும் பெண்
ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றார். நவம்பர் 26-ல் நடைபெறும் மிஸ் ஆப்ரிக்கா கோல்டன் போட்டியில் 70 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் இந்தியா சார்பில் புதுச்சேரியை சேர்ந்த சான் ரேச்சல் பங்கேற்கவுள்ளார். 60 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். அப்போது ஆப்பிரிக்கா சென்று வர அரசு சார்பில் உதவ வேண்டும் என அவர் உதவி கோரிய நிலையில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.