"மணிப்பூர் கொடூரம்... பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம்.." - வழக்கறிஞர் திடீர் மனு

Update: 2023-08-09 02:06 GMT

மணிப்பூர் கலவரத்தால் உடல் ரீதியாக மன ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து, அவர்களுக்கு உதவுவதற்காக பெண் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சீனி சையத் அம்மா மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில், மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனவேதனையில் இருந்து வெளிவர உதவுவதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து, அவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உடனடியாக இலவச சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மனுவை, ஒரு ரிட் மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வழக்கறிஞர் சீனி சையத் அம்மா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்