மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தானை சேர்ந்த அனைவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு
மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்