மொத்த அழகையும் ஈர்க்கும் கொடைக்கானல் அருவி - இயற்கையின் ரம்மியமான காட்சி..
கொடைக்கானல் கீழ்மலைக்கிராமப் பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையால், புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் சீராக கொட்டுகிறது. பசுமை போர்த்திய மலை முகடுகள் மற்றும் பள்ளத்தாக்கினுள், வெள்ளியை உருக்கி கொட்டியது போல தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அருவியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வண்ணம் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...