காங்கிரஸ் போராட்டம்.. தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்.. கேரளாவில் பரபரப்பு | Kerala
கேரளா முதல்வர் பினராய் விஜயன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.
திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அப்போது, ஏடிஜிபி அஜித்குமார் தலைமைச் செயலகம் வரை ஆதிக்கம் செலுத்துவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.