சாலையில் நடமாடிய 'சக்க கொம்பன்'..அருகில் சென்ற பைக்கர்ஸ் - நடந்தது என்ன.?
கேரள மாநிலம் மூணாறு சாலையில் காட்டு யானை நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சக்க கொம்பன் என்ற காட்டு யானை, வனப்பகுதியை விட்டு வெளியேறி திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றது. தகவலறிந்து விரைந்த வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சக்க கொம்பன் யானை, ஆக்ரோஷமின்றி அமைதியாக தேயிலை தோட்டத்திற்குள் இறங்கி சென்றது. இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சிலர், யானையின் அருகே சென்று சப்தம் எழுப்பிய நிலையில், வனத்துறை அதிகாரிகள் அவர்களை எச்சரித்தனர்.