கேரள பாஜக அலுவலகத்திற்கு பணம் வந்த விவகாரம்.. அரசு அதிரடி முடிவு

Update: 2024-11-03 01:43 GMT

கேரள பாஜக அலுவலகத்திற்கு பணம் வந்த விவகாரம்.. அரசு அதிரடி முடிவு

2021 கேரளா சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜவுக்கு கொண்டு வரப்பட்ட 41.50 கோடி ரூபாய் ஹவாலா பணம் விவகாரத்தில் மறு விசாரணையை நடத்த கேரள அரசு முடிவு செய்ததுள்ளது.

2021 ஏப்ரல் 3 ஆம் தேதி திருச்சூர், கொடைகரை பகுதியில் காரை வழிமறித்த கும்பல் பணத்தை கொள்ளையடித்துவிட்டதாக புகாரளிக்கப்பட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அப்போது, தேர்தல் செலவுக்காக கர்நாடகாவிலிருந்து 41 கோடியே 48 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கொண்டு வரப்பட்டதும், அதில் 7 கோடியே 90 லட்சம் ரூபாயை கொண்டுவந்த பணத்தை பாஜகவினரே திட்டம் போட்டு கொள்ளையடித்ததும் அம்பலம் ஆனது. இதில் பாஜகவை சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக திருச்சூர் மாவட்ட பாஜக அலுவலக செயலாளராக இருந்த சதீசன், அப்போது பாஜக அலுவலகத்துக்கு 6 சாக்குகளில் பணம் கொண்டு வரப்பட்டது தனக்கு தெரியும் என கூறியிருந்தார். இதனையடுத்து வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என இடதுசாரிகள், காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்புடன் முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் செலவுக்காக பாஜவுக்கு 41 கோடியே 48 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் தொடர்பாக மறுவிசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதி கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்