நடு கடலில் திடீரென பற்றி எரிந்த படகு.. தீயை அனைக்க போராடிய மீனவர்கள் - திக்..திக்..காட்சி

Update: 2024-09-09 15:59 GMT

கேரள மாநிலம் தானூரில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை பிடித்துக் கொண்டு கரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளிவர தொடங்கிய நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட மீனவர்கள் குடிநீரையும் கடல் நீரையும் பயன்படுத்தி தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் மீனவர்கள் நூலிழையில் உயிர்தப்பினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்