கேரள மாநிலம் உருவான நாளான வரும் நவம்பர் ஒன்றாம் தேதியை வெகு விமரிசையாக கொண்டாட கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஏழு நாட்கள் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி கேரளத்தை சேர்ந்த பிரபல நடிகர் மோகன்லால் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், உலகத்தில் எங்கு சென்றாலும் மலையாளிகள் காணப்படுவார்கள் என்றும், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கேரளம் முக்கியத்துவம் பெற்றுள்ளதுதாகவும் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட கேரளத்தில் பிறந்ததை பெருமையாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது வீடியோவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.