டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கும், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கும் எதிராக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடுத்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மார்ச் 21-இல் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறையினர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன் 22-ஆம் தேதி ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவருக்கு வரும் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனிடையே, அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததற்கு எதிராகவும், தனக்கு அமலாக்கத் துறை காவல் விதிக்கப்பட்டதற்கும் எதிராக, முதல்வர் கெஜ்ரிவால் சார்பில், கடந்த 23-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கெஜ்ரிவாலின் மனுவை அவசரமாக விசாரிக்க கோரியதை நிராகரித்த நிலையில், நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா, இன்று விசாரிக்கிறார்