`வரலாற்றிலே முதல்முறையா.. ரொம்ப டஃப்பா இருக்க போகுது' - மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

Update: 2024-02-13 09:44 GMT

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி, ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜே.இ.இ மெயின் தேர்வில் முதல் கட்ட தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்த தேர்வில் ஏராளமான மாணவர்கள் மதிப்பெண்களை வாரிக் குவித்து இருப்பதாகவும், இதன் காரணமாக மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு கடும் போட்டி ஏற்படும் என்றும் கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்