கைதான ஜார்கண்ட் முதல்வர் - அந்த BMW கார் யாருடையது? ED-க்கு மிகப்பெரிய ஷாக்.. திடீர் திருப்பம்

Update: 2024-02-01 02:30 GMT

சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், தான் இல்லாத நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டியுள்ளார். சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராக, துருவா காவல் நிலையத்தில் Sc /ST சட்டத்தின் கீழ் அவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், அமலாக்கத் துறையில் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பி.எம்.டபிள்யூ. காரின் உரிமையாளர் தான் இல்லை என்றும், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் தனக்குச் சொந்தமானதல்ல என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளால் தனக்கும் தனது குடும்பத்துக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்