உலகை உலுக்கும் இஸ்ரேல் போர்.. தவிக்கும் 7000 மலையாளிகள்.. மத்திய அரசுக்கு பறந்த கடிதம்
இஸ்ரேலில் தங்கி உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளிகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் மலையாளிகள் இஸ்ரேலில் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கான பாதுகாப்பை ஏற்பாடு செய்து மத்திய அரசு தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலில் தங்கியுள்ள மலையாளி குடும்பங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்