பறிபோகிறதா கே.எஸ்.அழகிரி பதவி?..தமிழக காங்கிரஸில் கிளம்பிய புயல் - டெல்லிக்கு பறந்த அதிர்ச்சி கடிதம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வபெருந்தகையை நியமிக்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையே ஒருங்கிணைக்க முடியாமல் செல்வபெருந்தகை தடுமாறிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். 18 சட்டமன்ற உறுப்பினர்களையே ஒருங்கிணைக்க முடியாத நிலையில், 300-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சில மாதங்களில், தலைமை மாற்றம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால், ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை நியமிக்கலாம் எனவும் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.